உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மனதை ஒரு நிலைப்படுத்த போலீசாருக்கு பயிற்சி அவசியம்

மனதை ஒரு நிலைப்படுத்த போலீசாருக்கு பயிற்சி அவசியம்

சிவகங்கை : ''போலீசாரின் உடல், மனதை ஒருநிலைப்படுத்த பயிற்சிகள் அவசியம்,'' என, சிவகங்கை எஸ்.பி., பன்னீர்செல்வம் பேசினார். ஆயுதப்படை போலீசாருக்கு, கலவரத்தின் போது பாதிக்கப்படும் போலீசாரை மீட்பது, சட்டம் ஒழுங்கு பிரச்னையை சமாளிப்பது குறித்த 15 நாள் பயிற்சி முகாம் நடந்தது. எஸ்.பி., பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி., கண்ணன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வரவேற்றார். மதுரை அப்போலோ ஆஸ்பத்திரி டாக்டர் ஜூட்வினோத் செய்முறை பயிற்சி அளித்தார். சிவகங்கை சமுதாயக்கல்லூரி இயக்குனர் ஜார்ஜ் பங்கேற்றார். எஸ்.பி., பேசுகையில்: சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போலீசார் தங்களை தயாராக வைத்திருக்கவேண்டும். இதற்காக மனம், உடல் ரீதியாக நீங்கள் தயாராக பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்றார். சிறப்பு எஸ்.ஐ., சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ