உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பாரபட்சம்

வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பாரபட்சம்

தேவகோட்டை : தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் தலைவர் பிர்லா கணேசன் (அ.தி.மு.க.) தலைமையில் நடந்தது. துணை தலைவர் ராசாத்தி, கமிஷனர் பாலகிருஷ்ணன்,பி.டி.ஓ. விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:தலைவர்: தமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக ஓரிரு மாதம் திட்டப்பணிகள் தாமதமானது. விரைவில் நிதி பெற்று பார்லிமென்ட் தேர்தலுக்குள் பணிகள் நிறைவேற்றப்படும்.ரவி (தி.மு.க.) : மின்வாரிய அதிகாரிகள் உட்பட வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என கண்டன தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் அதிகாரிகள் வராதது இந்த மன்றத்தை அவமதிப்பது போல் உள்ளது. உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.திலகவதி (தி.மு.க.): நாகாடி ஊராட்சியில் பாவனக்கோட்டை பரம்பக்குடியில் ரோடு போடாமல் உள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படாமல் உள்ளது.தலைவர்: நிதி வந்தவுடன்ரோடு போடப்படும். இடிக்கப்பட்டதற்கு அனுமதி தராமல் புதிய மேல்நிலை தொட்டி கட்ட அனுமதி வந்துள்ளது. இடத்தை தேர்வு செய்தால் நாளையே பணியை துவங்கலாம்.ரவி : மகாத்மா காந்தி உறுதியளிப்பு திட்டத்தில் ஒரு வருடத்தில் செய்த பணிகள் பட்டியல் 10 நிமிடத்துக்குள் பொறியாளர் தர வேண்டும். இப்பணியில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஒரு சில ஊராட்சிகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு பணி செய்யப்பட்டு உள்ளது. சில ஊராட்சிகளில் ஒரு பணிகூட செய்யப்படவில்லை. நாங்கள் கூறும் பணி இல்லாமல் வேறு பணி செய்தால் எங்களுக்கு தெரிய வேண்டாமா. திருமணவயல் ரோட்டில் செல்ல முடியவில்லை. நாகனியில் ரோட்டின் அருகில் தண்ணீர் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது.தலைவர்: (அலுவலரிடம்)மகாத்மா காந்தி உறுதியளிப்பு திட்டத்தில் இரண்டு ஆண்டில் செய்த பணியையும் , பணி ஒதுக்கியும் செய்யாமல் இருக்கும் ஊராட்சிகளின் பட்டியலை எடுத்து வாருங்கள். எந்த ஊராட்சியிலும் கோடிக்கணக்கில் பணி நடக்கவில்லை. ஒதுக்கிய பணியை செய்யவில்லை என்றால் மீண்டும் பணி ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதிகாரிகள் கவுன்சிலர்களிடம் பணிகளை பற்றி தெரிவியுங்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை