விவசாயிகளுக்கு விதை தொகுப்பு வழங்கல்
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் வாணியம்பட்டியில் ஊட்டசத்து வேளாண்மை இயக்க திட்டத்தை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்து விவசாயிகளுக்கு காய்கறி விதை, பழச்செடி, பயறு வகை தொகுப்புகளை வழங்கினார்.கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: விவசாயிகள் உடல் நலனுக்காக முதல்வர் இத்திட்டத்தை துவக்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் செயல்படுத்த நஞ்சற்ற காய்கறி, காய்கறி விளைச்சல் அதிகரிப்பிற்காக தோட்டக்கலைத்துறை சார்பில் கத்தரி, தக்காளி, வெண்டை, கொத்தவரை, கீரை,மிளகாய் விதை தொகுப்பு 46 ஆயிரமும், பப்பாளி, கொய்யா, எலுமிச்சை செடி தொகுப்பு 28 ஆயிரம், காராமணி, தட்டைபயறு, அவரை ஆகிய பயறு தொகுப்பு 2 ஆயிரமும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார். இத்திட்டத்தில் சேர http://inhorticulture/tn/gov/in/inhorticulture/ ல் விண்ணப்பிக்க தோட்டக்கலைத் துறையினர் அறிவித்துள்ளனர். வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.