உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டிட்டோ ஜாக் உண்ணாவிரதம்

டிட்டோ ஜாக் உண்ணாவிரதம்

சிவகங்கை, : தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அன்பரசு பிரபாகரன், ஜான் பீட்டர், முத்துராமலிங்கம், மனோகரன், முத்துப்பாண்டியன், அழகப்பன், ராஜராஜன், அருள் கூட்டு தலைமை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜோசப் சேவியர் தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் ரெங்கராஜன், ராசா, சேசுராஜ், தாமஸ் அமலநாதன், டேவிட், பாண்டியராஜன், ராமகிருஷ்ணன் பேசினர்.அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களின் 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்தார். மாவட்ட நிதிக் காப்பாளர் சிங்கராயர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ