உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காஞ்சிரங்காலில் எக்கோ பார்க் நடப்பட்ட துாண்கள் அகற்றம் கோட்டாட்சியர் விசாரணை 

காஞ்சிரங்காலில் எக்கோ பார்க் நடப்பட்ட துாண்கள் அகற்றம் கோட்டாட்சியர் விசாரணை 

சிவகங்கை: சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் 'எக்கோ பார்க்' அமைக்கும் விதமாக மரக்கன்றுகள் வளர்க்க அமைத்த 'பென்ஷிங்' கற்களை சிலர் உடைத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட இலந்தங்குடிபட்டி கண்மாய் கரையில் அரசுக்கு சொந்தமான 30 ஏக்கரில், வனத்துறை உதவி யுடன், 'எக்கோ பார்க்' அமைக்க மாவட்ட நிர் வாகம் திட்டமிட்டது. முன்னாள் கலெக்டர் ஆஷா அஜித் மரக்கன்றுகளை நட்டு வைத்து, இத்திட்டத்தை ஜூன் 24 ம் தேதி துவக்கி வைத்தார். தனியார் தொண்டு நிறு வனம் மூலம், 30 ஏக்கரை சுற்றியுள்ள இடங்களை பாதுகாக்கும் நோக்கில், சிமென்ட் கற்கள் மூலம் 'பென்ஷிங்' அமைத்து உள்ளனர். தற்போது அந்த சிமென்ட் கற்களில் கம்பி வலை அமைத்து வருகின்றனர். வேலி அமைத்த பின், 30 ஏக்கர் நிலத்தில் பலன் தரக்கூடிய 4800 மரக் கன்றுகளை நட்டு, சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்த்து, 'எக்கோ பார்க்' உருவாக்க பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். நேற்று முன்தினம் மாலை இலந்தங்குடிபட்டி கண்மாய் தெற்கு பக்கத்தில் அமைக்கப்பட்ட கற்துாண்களில் கம்பி வேலி அமைத்தனர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மேல் அப்பகுதிக்கு சென்ற சிலர் வேலிக்காக போடப்பட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட கற்துாண்களை உடைத்து சேதப்படுத்தினர். கோட்டாட்சியர் விசாரணை சிவகங்கை கோட்டாட்சி யர் விஜயகுமார், தாசில்தார் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர சிமென்ட் கற்துாண்களை உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிரங்கால் வி.ஏ.ஓ., காமாட்சி, சிவகங்கை போலீசில் புகார் அளித்துள்ளார். மது அருந்துவோர் அட்டகாசம் அப்பகுதி மக்கள் கூறியதாவது: இரவில் மதுபான பாட்டில்களை வாங்கி கொண்டு காட்டிற்குள் செல்லும் கும்பல், இரவு முழுவதும் அங்கு அமர்ந்து மது அருந்தி ரகளையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் தான் மது அருந்த செல்வதற்கு இடையூறாக இருப்பதாக கருதி கற் துாண்களை சேதப்படுத்தியிருக்க கூடும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை