தீபாவளி சிறப்பு விற்பனை
சிவகங்கை : சிவகங்கை கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் துவக்கி வைத்தார். மண்டல மேலாளர் ஸ்டாலின், மேலாளர் கனிச்செல்வி, விற்பனை நிலைய மேலாளர் முல்லைக்கொடி பங்கேற்றனர். இங்கு தீபாவளியை முன்னிட்டு பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு ரூ.50 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர். கோ ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை www.cooptex.gov.inஎன்ற இணையதளத்தின் மூலமும் வாடிக்கையாள்கள் வாங்கலாம் என தெரிவித்தனர்.