உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனைகளில் சிறப்பு டாக்டர் பணியிடம் அவுட் சோர்சிங் முறையில் நிரப்ப டாக்டர்கள் எதிர்ப்பு

அரசு மருத்துவமனைகளில் சிறப்பு டாக்டர் பணியிடம் அவுட் சோர்சிங் முறையில் நிரப்ப டாக்டர்கள் எதிர்ப்பு

சிவகங்கை:தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சிறப்பு டாக்டர்கள் பணியிடத்தை அவுட்சோர்சிங் முறையில் பணி அமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு டாக்டர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதுசிவகங்கை மருத்துவ கல்லுாரியில் 230 டாக்டர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 50க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள தாலுகா மருத்துவமனை உட்பட மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இதே நிலைமை தான் நிலவுகிறது. தமிழகத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள் உள்ளனர். சிறப்பு டாக்டர்கள் மற்றும் உயர் சிறப்பு டாக்டர்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம் தான். ஆனால் தமிழகத்தில் 19 ஆயிரம் அரசு டாக்டர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதற்கு காரணம் தமிழக அரசின் போதிய ஆர்வமின்மையேயாகும்.சிறப்பு டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே டாக்டர்களை அழைத்துக் கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. பணி நேரம், தேவைக்கு தகுந்தாற் போல் அவர்களை பணியில் அமர்த்தி சம்பளம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை அரசு கைவிட்டு நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்க முடியும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை