மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
10 hour(s) ago
பயிற்சி முகாம்
10 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
10 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
10 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
10 hour(s) ago
பூவந்தி: பூவந்தியில் வடமாடு மஞ்சுவிரட்டு வீரர் அவினாஷ் நினைவாக கிராம மக்கள் சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடந்தது.போட்டிகளை ஜல்லிகட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊராட்சி தலைவர் விஜயா ஆறுமுகம் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய துணைதலைவர் மூர்த்தி பங்கேற்றனர். பெரிய மாடு பிரிவில் 15 மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 25 மாட்டு வண்டிகளும் பங்கேற்றன. சிவகங்கை - மதுரை ரோட்டில் பூவந்தியில் இருந்து திருமாஞ்சோலை வரை சென்று திரும்ப வேண்டும் என பந்தய துாரமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.பெரிய மாடு பிரிவில் அவனியாபுரம் மோகன்சாமி குமார் மாடு முதலிடமும், மேலராங்கியம் ஜி.எம்., மாடு 2ம் இடமும். பூவந்தி தியானபாண்டி மாடு 3ம் இடமும் பிடித்தன. சின்ன மாடு பிரிவில் புதுப்பட்டி அம்பாள் மாடு முதலிடமும், தேனி சரவணன் மாடு 2ம் இடமும், மேலசென்ட் பொன்மாரி மாடு 3ம் இடமும் பிடித்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளுக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசும் கேடயமும் வழங்கப்பட்டன.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago