மருத்துவக் கல்லுாரியில் கல்வி விழா
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளுக்கு இடையிலான கல்வி விழா நடந்தது. முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை முதல்வர் விசாலாட்சி முன்னிலை வகித்தார். நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் ஓய்வு சரோஜினி கலந்து கொண்டார். மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி, போஸ்டர் பிரசன்டேஷன், கருத்தரங்கு, இணையவழிப் போட்டி நடந்தது. கேரளாவின் மஞ்சேரி மருத்துவக் கல்லுாரி அணி முதலிடம் பிடித்து ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றது. மருத்துவக் கண்காணிப்பாளர் தங்கத்துரை, மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஷர்மிளா திலகவதி, நிலைய மருத்துவர் முகமதுரபி, துணை நிலைய மருத்துவர் தென்றல் உள்ளிட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.