கல்விக்கடன் முகாம்
இளையான்குடி: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து சிறப்பு கல்விக்கடன் முகாமை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் நடத்தியது.முதல்வர் ஜபருல்லாகான் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு கல்விக்கடன் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.முகாமில் அரசு சார்ந்த 10 வங்கிகள் கடன் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஏற்பாடுகளை வணிகவியல் கணிப்பொறி பயன்பாடு துறை தலைவர் நாசர் மற்றும் கணிதவியல் துறைத்தலைவர் முத்துசாமி செய்திருந்தனர்.