மேலும் செய்திகள்
ஊதிய முரண்பாடை களைய ஆசிரியர்கள் வலியுறுத்தல்
13-Oct-2025
சிவகங்கை: விதிகளுக்கு முரணாக ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்கள் சிவகங்கை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை வட்டாரத்தில் 120 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியர்களின் மருத்துவ விடுப்பு நாட்களை கணக்கிட்டு, ஈட்டிய விடுப்பு நாட்களிலிருந்து கழித்ததை கண்டித்து நேற்று மாலை சிவகங்கை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அமர்ந்து ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் இந்திராகாந்தி, செயலாளர் கணேசன், பொருளாளர் பிரபாகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. அவர்களிடம் வட்டாரக் கல்வி அலுவலர் சார்லஸ் பேச்சு நடத்தினார். ஆசிரியர்கள் கூறுகையில்,ஈட்டிய விடுப்பிலிருந்து ஊதியமற்ற அசாதாரண விடுப்பை மட்டுமே கணக்கிட்டு கழிக்க வேண்டுமென விதிமுறை உள்ளது. ஆனால் மருத்துவ விடுப்பையும் கணக்கிட்டு ஈட்டிய விடுப்பிலிருந்து கழிக்கின்றனர். இதனால் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈட்டிய விடுப்பு கணக்கிடுவதில் மேற்கொண்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அரசாணை மற்றும் செயல்முறைகளின் நகல் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
13-Oct-2025