உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

தேவகோட்டை: தேவகோட்டை ஜமாஅத் நிர்வாகிகளை மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி வக்கீல் அன்வர் சமீம் தேர்தல் அலுவலராக தேர்தலை நடத்தினார்.1522 பேரில் 950 பேர் ஓட்டளித்தனர். முதல்கட்டமாக பெரிய பள்ளிவாசல், காந்தி ரோடு பள்ளி வாசல், முகமதியர் பட்டனம் பள்ளிவாசல் பகுதிகளிலிருந்து தலா ஏழு பேர் வீதம் 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதிலிருந்து தேவகோட்டை நகர முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. தலைவராக மகபூப்பாட்சா வெற்றி பெற்றார். செயலாளராக ஆதம் மாலிக், பொருளாளராக முகமது ஷகிருல் பர்கி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை