உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாய நிலங்களில் மின்வேலி  அமைத்தால் வழக்கு பதியப்படும்   மின் செயற்பொறியாளர் எச்சரிக்கை   

விவசாய நிலங்களில் மின்வேலி  அமைத்தால் வழக்கு பதியப்படும்   மின் செயற்பொறியாளர் எச்சரிக்கை   

சிவகங்கை: விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் வழக்கு பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மழைக்காலங்களில் மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதி, மின் கேபிள், மின்கம்பம், டிரான்ஸ்பார்மர் பகுதிக்கு செல்வதை தவிர்க்கவும். மின்கம்பம், சாதனம் அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடக்கவோ, ஓடவோ கூடாது. தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்கம்பிகள் அருகே செல்லவோ, தொடவோ கூடாது. மின்வாரியத்தை சாராதவர்கள் மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்களில் பணி செய்யக்கூடாது. வீடு கட்டும்போது மின்கம்பத்திற்கு அருகே போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும். டிராக்டர், லாரி போன்ற வாகனங்களில் கரும்பு போன்ற பொருட்களை ஏற்றி செல்லும் போது மின்கம்பி இருந்தால், முன்கூட்டியே மின்வாரியத்திற்கு தெரிவிக்க வேண்டும். வீடு, கடை, பள்ளிகளில் மின்கசிவை தவிர்க்க உயிர் காக்கும் கருவிகள் பொருத்த வேண்டும். கால்நடைகளை மின்பாதையின் கீழ், ஸ்டே கம்பிகளில் கட்டக்கூடாது. வீட்டின் சுவர் ஈரமாக இருந்தால் மின்சுவிட்சுகளை இயக்க கூடாது. மின்மீட்டர் பொருத்தப்பட்ட இடங்கள் ஈரமாக இருந்தால், மின்சாரத்தை உபயோகிக்க கூடாது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம். மின்வேலி இருப்பதை கண்டறிந்தால் போலீசில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். பருவ மழை காலங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் மின் வாரியத்திற்கு உடனே தெரிவிக்க வேண்டும். மின்நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை