மேலும் செய்திகள்
சிவகங்கையில் யானை தந்தம் மான் கொம்புகள் கடத்தல்
5 hour(s) ago
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
5 hour(s) ago
விபத்து காரணம் என்ன
5 hour(s) ago
திருப்புத்துார் அமல அன்னை சர்ச் கொடியேற்றம்
30-Nov-2025
சிவகங்கை: 'குஜராத் மாநிலத்தைப் போன்று அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் ஓய்வுக்கு பின் மாநில அரசு பணிக்கொடை வழங்க வேண்டும்,' என, அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 1993ல் அமைப்பாளராக பணியில் சேர்ந்தவர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால் அரசு 2023 முதல் மேற்பார்வையாளர் பதவி உயர்வுக்கான தகுதி காண் பட்டியலை மட்டுமே வெளியிட்டு வருகிறது. ஆனால் பதவி உயர்வு வழங்கவில்லை. இதனால் தகுதி பட்டியலில் இருந்தும் மாநில அளவில் 2,500 அமைப்பாளர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர். அடிப்படை சம்பளத்தில் உயர்வு கிடைக்காமல் உள்ளனர். அதே போன்று ஓய்வுக்கு பின் பென்ஷன் மாதம் ரூ.2,000 மட்டுமே பெற்று வருகின்றனர். இதை ரூ.9,000 ஆக உயர்த்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி குஜராத் மாநில அரசு, அம்மாநில அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களுக்கு வழங்குவது போன்று தமிழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையை மாநில அரசு வழங்க வேண்டும். ஆண்டுதோறும் மே கோடை விடுமுறையாக வழங்க வேண்டும். இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இயக்குனர் சங்கீதா, ஐ.சி.டி.எஸ்., இயக்குனர் மெர்சி ரம்யாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாநில தலைவர் ஐ.பாக்கியமேரி கூறியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். குறிப்பாக குஜராத் போன்று ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். டிச.,க்குள் உரிய அறிவிப்பை வெளியிடாவிட்டால் சங்க செயற்குழுவை கூட்டி போராட்டம் குறித்து முடிவு செய்யுவுள்ளோம் என்றார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
30-Nov-2025