உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம் 

சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம் 

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.19ல் நடக்கிறது.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜன.19 அன்று காலை 10:30 மணிக்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இங்கு, இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்ப படிவம், போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு மாணவர் சேர்க்கையும் நடக்கிறது. விருப்பம் உள்ள பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் கார்டுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை