உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எஸ்.புதுாரில் மேய்ச்சல் நிலம், குன்றுகள் ஆக்கிரமிப்பு கேள்விக்குறியாகும் விவசாயம்

எஸ்.புதுாரில் மேய்ச்சல் நிலம், குன்றுகள் ஆக்கிரமிப்பு கேள்விக்குறியாகும் விவசாயம்

எஸ்.புதுார் : எஸ்.புதுாரில் மேய்ச்சல் நிலம், குன்றுகளை ஆக்கிரமித்து வருவதால் விவசாயம் கேள்விக்குறி ஆகி வருகிறது.இப்பகுதி விவசாயிகள் ஆண்டு முழுவதும் நெல் மற்றும் தோட்டப் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக மழை பெய்தும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் விவசாயம் குறைந்து வருகிறது. விவசாயத்திற்கு முக்கிய தேவையான நீர்ப் பிடிப்பு பகுதிகளாக விளங்கும் மேய்ச்சல் நிலங்கள், குன்றுகளை சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர்.இவ்வொன்றியத்தில் மழை நீரை சேகரிக்கும் பொருட்டு ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் மேய்ச்சல் நிலங்களாகவும், மேய்ச்சல் குன்றாகவும் விடப்பட்டுள்ளது.இவற்றில் பெய்யும் மழை நீர் அருகே உள்ள ஓடை வழியாகச் சென்று கண்மாய் நீர்நிலைகளுக்கு செல்லும். அதன் மூலம் விவசாயிகள் பல்வேறு பயிர் சாகுபடி செய்வது வழக்கம்.ஆனால் தற்போது சிலர் குறிப்பிட்ட இடத்தை கிரையம் வாங்கும்போது அதன் அருகே உள்ள பல ஏக்கர் மேய்ச்சல் நிலத்தையும், குன்று, கால்வாய்களையும் ஆக்கிரமித்து அடைத்து விடுகின்றனர்.இந்த ஆக்கிரமிப்புகளால் பல்வேறு ஓடைகளில் தண்ணீர் வராமல் கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ