உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம்

சிவகங்கை: மாவட்ட அளவில் பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.கல்லல் முருகப்பா மேல்நிலை பள்ளியில் ஓவிய போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் அழகப்பன், கலை ஆசிரியர் மாரிமுத்து, அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, மாவட்ட பொருளாளர் பிரபு ஏற்பாடுகளை செய்தனர்.* காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் லதா தலைமை வகித்தார். கட்டுரை போட்டி நடந்தது.சாரண, பசுமை படை, என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பள்ளி வளாகத்தை துாய்மை படுத்தினர். சாரண ஆசிரியர் நாகராஜன், ஆசிரியர் ராம்குமார், என்.எஸ்.எஸ்., அலுவலர் உதயகுமார் பங்கேற்றனர்.* கவுரிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நெகிழி ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் தலைப்பில் ஓவியம், கட்டுரை போட்டி நடத்தினர்.தலைமை ஆசிரியர் ஜான்பீட்டர் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் முருகன், சந்தியாகு, தீபா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி