மேலும் செய்திகள்
விவசாயி தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை
21-Jul-2025
நாட்டாகுடி; விவசாயி தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடியைச் சேர்ந்தவர் சோணைமுத்து, 65; விவசாயி. இவரது குடும்பம் மதுரையில் வசிக்கிறது. இவர் குடும்பத்தை பிரிந்து, ஏழு ஆண்டுகளாக நாட்டா குடியில் தங்கி விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு வீட்டு திண்ணையில் சோணைமுத்து அமர்ந்திருந்தார். டூ - வீலரில் வந்த இருவர், அவரது தலையை துண்டித்து, அதை எடுத்துக்கொண்டு தப்பினர். எதிரே வந்த பாண்டி, 66, என்பவரையும் வெட்டினர். எஸ்.பி., சிவபிரசாத் மற்றும் போலீசார் விசாரித்தனர். டி.புதுார் கண்மாயில் கிடந்த சோணைமுத்து தலையை போலீசார் கைப்பற்றினர். முன்விரோதம் காரணமாக, நாட்டாகுடி சமயதுரை, 25, பி.வேலாங்குளம் சிங்கமுத்து, 25, ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக, சோணைமுத்துவின் அண்ணன் மகன் அழகர்சாமி, திருப்பாச்சேத்தி போலீசில் புகார் அளித்தார் . சிங்கமுத்துவை போலீசார் கைது செய்து தலை மறைவான சமயதுரையை தேடி வருகின்றனர்.
21-Jul-2025