உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி வட்டார கிராமங்களில் விரும்பிய விதை நெல் கிடைக்காததால் விவசாயிகள்.. சிரமம்

இளையான்குடி வட்டார கிராமங்களில் விரும்பிய விதை நெல் கிடைக்காததால் விவசாயிகள்.. சிரமம்

இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் விரும்பிய விதை நெல் கிடைக்காததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மகசூலும் குறையும் என்பதால் கவலையில் உள்ளனர். இளையான்குடி அருகே நெட்டூர் கண்மாய் நீரைக் கொண்டு பாசனம் செய்யப் படும் மேலாயூர், தொண்டையூர் முனைவென்றி, நெடுங்குளம், கீழநெட்டூர் அலம்பச்சேரி வேலடி மடை, மணக்குடி, தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப் படுகிறது. இப்பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் பம்பு செட்களை கொண்டும் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையை வைத்து விவசாயிகள் விதை நெல்களை மானாவாரியாக துாவி வருகின்றனர். தற்போது அதிக மகசூல் கிடைக்கும் ஐ.ஆர் 20,ஐ.ஆர் 36 போன்ற நெல் விதைகள் வேளாண்மை துறை அலுவலகத்தில் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கீழநெட்டூரைச் சேர்ந்த விவசாயி அசோக்குமார் கூறியதாவது: கீழநெட்டூர் கண்மாய் பாசன பகுதிகளில் விவசாயிகள் அதிக மகசூல் தரக் கூடிய ஐ.ஆர் 20,ஐ.ஆர் 36 போன்ற விதை நெல் களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த விதை நெல் வேளாண்மை துறை அலுவலகத்தில் கிடைக்காமல் என்.எல்.ஆர்.,ஆர்.என்.ஆர்,கோ.52 போன்ற நெல் விதைகளே இருப்பதினால் ஏராளமான விவசாயிகள் ஐ.ஆர் 20,ஐ.ஆர் 36 போன்ற விதைநெல்களை அதிக விலை கொடுத்து தனியார் கடைகளில் வாங்கி வருகின்றனர். மேற்கண்ட விதை நெல்களை வேளாண்மைத் துறை அலுவலகத்தில் விற்பனை செய்ய வேண்டு மென கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். இளையான்குடி வேளாண்மை துறை உதவி இயக்குனர் தங்க பாண்டியன் கூறியதாவது: வேளாண்மை பல்கலைக்கழகங்கள், வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைப்படி 10 வருடங் களுக்குட்பட்ட அதிக மகசூல் தரக்கூடிய விதை நெல்களையே விவசாயி களுக்கு வழங்கி வரு கிறோம். ஐ.ஆர் 20,ஐ.ஆர் 36 போன்ற விதை நெல்களுக்கு அரசு மானியம் இல்லாத தால் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. தற்போது வழங்கப்படும் நெல் விதைகளும் அதிக மகசூல் தரக்கூடியது. இருப்பினும் விவசாயிகள் விரும்பும் விதை நெல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை