உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வழி நெடுகிலும் சாய்ந்த மின்கம்பம் விவசாயிகள் அச்சம்

 வழி நெடுகிலும் சாய்ந்த மின்கம்பம் விவசாயிகள் அச்சம்

காரைக்குடி: கல்லலில் விவசாய நிலம் அருகே வழி நெடுகிலும் சாய்ந்த மின்கம்பங்களால் விவசாயிகளும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து வருகின்றனர். கல்லல் அருகே உள்ள செவரக்கோட்டை ஊராட்சி, எட்டுக்குடிபட்டியில் இருந்து பட்டணம்பட்டி செல்லும் சாலையில் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது விவசாயிகள் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சாலையின் ஓரம் வயல்களை ஒட்டி மின்கம்பங்கள் செல்கின்றன. சாலை நெடுகிலும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. கனமழை பெய்து வரும் நிலையில் மின்கம்பங்கள் சாய்ந்து விடுமோ என்ற அச்சத்திலேயே வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை