மேலும் செய்திகள்
கிடாரிப்பட்டியில் 'கிலி'
06-May-2025
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் வெறிநாய்கள் ரோட்டில் நடந்து செல்லும் மக்கள், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை விரட்டி விரட்டி கடிப்பதால் வெளியில் நடமாடவே அச்சமடைந்துள்ளனர்.திருப்பாச்சேத்தியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருப்பாச்சேத்தியைச் சுற்றிலும் சலுப்பனோடை, கானுார், கல்லுாரணி, ஆவரங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தங்களது தேவைகளுக்கு திருப்பாச்சேத்தி வந்து செல்கின்றனர். திருப்பாச்சேத்தியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. ரோட்டில் நடந்து செல்லும் மக்களை விரட்டி விரட்டி கடிப்பதால் வெளியில் நடமாடவே அச்சமடைந்து வருகின்றனர்.பள்ளிகளுக்கு சிறுவர்களை தனியாக அனுப்பவே முடியவில்லை. மேலும் வீடுகளில் கட்டி போடப்பட்டிருக்கும் ஆடு, மாடுகளையும் நாய்கள் கடிப்பதால் அவைகளுக்கும் வெறி பிடித்து விடுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் தெருநாய்களால் பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை நாய்கள் கடித்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
06-May-2025