உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உணவகங்களுக்கு அபராதம்

உணவகங்களுக்கு அபராதம்

திருப்புத்துார் : திருப்புத்துாரில் சில உணவகங்களில் தரமற்ற, கலப்பட உணவு விற்பனையாவதாக மாவட்ட அலுவலருக்கு வந்த புகாரை அடுத்து திருப்புத்தூரிலுள்ள 17 உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தியாகராஜன், ஹேமமாலினி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.தரம், சுகாதார நடைமுறை, சான்றிதழ் குறித்து ஆய்வு நடத்தினர்.ஆய்வில் கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான பால், நெகிழிப்பை பயன்படுத்திய 7 உணவகங்களுக்கு தலா ரூ 1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பரிசோதனைக்காக 16 உணவு மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி