உள்ளூர் செய்திகள்

கொடியேற்று விழா

சிவகங்கை: மாவட்ட அளவில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா நடந்தது. மாநில செயலாளர் பாண்டி தலைமை வகித்தார். நிதி காப்பாளர் நடராஜன் கொடியேற்றினார். ஒன்றிய பொறுப்பாளர் நவநீதன், மானாமதுரையில் ஒருங்கிணைப்பாளர் உடையனசாமி, திருப்புத்துாரில் இணை ஒருங்கிணைப்பாளர் மணிமுரசு, சிங்கம்புணரியில் இணை ஒருங்கிணைப்பாளர் முத்தழகு ஆகியோர் கொடியேற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லதா உட்பட அனைத்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை