உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிள்ளைவயல் காளி கோயிலில் ஜூலை 4ல் பூச்சொரிதல் விழா

பிள்ளைவயல் காளி கோயிலில் ஜூலை 4ல் பூச்சொரிதல் விழா

சிவகங்கை: சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஜூலை 4 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஜூலை 4 ம் தேதி காலை 9:15 முதல் 10:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் பூச்சொரிதல் விழா துவங்குகிறது.அன்று மாலை 4:45 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் பூக்கரகம் எடுத்து வந்து, அம்மன் சன்னதி முன் பூக்குழி இறங்கிநேர்த்தி செலுத்துவர். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தினமும் மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடைபெறும்.ஜூலை 9 ம் தேதி காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும். அன்று இரவு 9:00 மணிக்கு காளியம்மன் திருவீதி உலா வருவார். ஜூலை 11 அன்று அதிகாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு பால் அபிேஷகம், அதனை தொடர்ந்து சிறப்பு அபிேஷகம், நைவேத்தியம் நடைபெறும்.அன்றைய தினம் சந்தனக்காப்பு அலங்காரத்தில் கையில் குழந்தையுடன் பிள்ளைவயல் காளியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.அன்றைய தினம் நகரில் உள்ள அனைத்து பகுதி பெண்களும் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்வர். கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !