உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி வந்த வெளிநாட்டு மாணவ, மாணவியர்கள்

கீழடி வந்த வெளிநாட்டு மாணவ, மாணவியர்கள்

கீழடி: கீழடி அருங்காட்சியகத்தை காண வெளிநாட்டு மாணவ, மாணவியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் நேற்று வருகை தந்திருந்தனர். இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவைகள் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டது. 2014 முதல் அகழாய்வு நடந்து வரும் நிலையில் கண்டறியப்பட்ட பொருட்களில் குறிப்பிடத்தக்க 13 ஆயிரத்து 384 பொருட்களை மட்டும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தியுள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் கீழடி அருங்காட்சியகத்தை கண்டு ரசித்து வருகின்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா,பர்மா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 98 மாணவ, மாணவியர்கள் உட்பட 120 பேர் நேற்று கீழடி அருங்காட்சியகத்தை கண்டு ரசித்தனர். அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள சுடுமண் பொருட்கள், அணிகலன்கள், பாசிகள், இரும்பு பொருட்கள், முதுமக்கள் தாழிகள் ஆகியவற்றை கண்டு ரசித்தனர். இலங்கை கவுசல்யா கூறியதாவது, தமிழர்களின் வாழ்வியலை, அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே காட்சிப்படுத்தியுள்ளது பெருமைக்குரிய விஷயம். பண்டைய தமிழர்கள் கல்வி, தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்களை காணும் போது எதிர்காலத்தை கணித்து வாழ்ந்தது தெரிகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ