மேலும் செய்திகள்
கறவை மாடு வளர்ப்பு இலவசப்பயிற்சி
28-Jan-2025
சிவகங்கை: பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் பிப்.,10 முதல் 27 வரை விவசாயிகள், தொழில் முனைவோர், பெண்களுக்கு இலவச சிறுதொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.பிப்.,10 முதல் 15 வரை கூடை பின்னுதல், பிப்.,12ல் ஆடு, கோழி தீவனம் தயாரிப்பு, பிப்., 13ல் தரை துடைக்கும் திரவம், பாத்திரம், கழிப்பிடம் சுத்தம் செய்யும் திரவம் தயாரித்தல் பயிற்சி, பிப்., 15ல் தேனீ வளர்ப்பு, பிப்., 18 ல் நாட்டுக்கோழி, காடை வளர்ப்பு, நோய் மேலாண்மை பயிற்சி, பிப்., 21 ல் வெண் பன்றி வளர்ப்பு, பிப்., 27 ல் பண்ணை குட்டை மீன் வளர்ப்பு, நோய் மேலாண்மை பயிற்சி, பிப்., 19 மற்றும் 20 ல் மெழுகுவர்த்தி, சாம்பிராணி, பத்தி குச்சி, பூஜை பொருட்கள் தயாரித்தல், பிப்., 25 முதல் 26 வரை தேங்காய் ஓட்டை பயன்படுத்தி அலங்கார பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சி பெற 94885 75716 என்ற எண்ணில் பதிவு செய்யலாம் என உழவர் பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28-Jan-2025