மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி
காரைக்குடி: அமராவதிப்புதுார் கிராமிய பயிற்சி மையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கியது. அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு அரசு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்கும் வசதி, உணவு வழங்கப்படுகிறது. 100 மாணவிகள் 20 மாணவர்கள் என 120 பேர் பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி வகுப்புகளை தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஸ் வெங்கட் தொடங்கி வைத்து பயிற்சி கையேடுகளை வழங்கினார்.