இலவச தொழில் பயிற்சி
திருப்புத்துார்,நவ.4- பிள்ளையார்பட்டி பி.என்.பி.உழவர் பயிற்சி மையத்தில் இலவச தொழிற்பயிற்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம். இந்த மையத்தில் மாதந்தோறும் இலவச தொழில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. ஒரு நாள் பயிற்சியாக நவ.12ல் சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் தயாரித்தல், நவ.13ல் வெண்பன்றி வளர்ப்பு, நவ.14 ல் நாட்டுக்கோழி வளர்ப்பு, நவ.15ல் வெட்டிவேர் சாகுபடி, நவ.18 ல் முருங்கைகாயை மதிப்புக்கூட்டல்,நவ.19ல் மாட்டு சாணத்தை மதிப்பு கூட்டல், நவ.25ல் நுண் கீரை வளர்ப்பு ஆகிய பயற்சி அளிக்கப்படும். இரண்டு நாள் பயிற்சியாக நவ.20ல் பூஜை பொருட்கள் தயாரித்தல், நவ.27 ல் ஊறுகாய்,தொக்கு தயாரித்தல் பயிற்சி, ஒரு வாரப் பயிற்சியாக நவ.10ல் அழகுக்கலை பயிற்சி, நவ.24ல் கால்மிதியடி தயாரித்தல் பயிற்சி தரப்படும்.விருப்பமுள்ளவர்கள் 94885 75716 ல் முன் பதிவு செய்யலாம்.