உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மேம்பால சர்வீஸ் ரோட்டில் அடிக்கடி விபத்து

சிவகங்கை மேம்பால சர்வீஸ் ரோட்டில் அடிக்கடி விபத்து

சிவகங்கை: சிவகங்கை நகரில் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் ரோட்டில் செல்லும் முறையற்ற வாகன போக்குவரத்தால் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.சிவகங்கை நகரில் மதுரை தொண்டி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் இருபுறத்திலும் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக சப்வேக்கு செல்பவர்கள் முறையற்ற முறையில் செல்கிறார்கள். இடது புறமாக செல்லக்கூடியவர்கள் வலது புறமாகவும் வலது புறமாக செல்லக்கூடியவர்கள் இடது புறமாகவும் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.ஆயுதப்படை குடியிருப்பு பகுதியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் இடது புறமாக சென்று சப்வே வழியாக மெயின் ரோட்டிற்கு செல்ல வேண்டும். சப்வேயில் பெரும் பாலான நாட்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் வலது புறமாக சென்று பாலத்தின் மேல் செல்வதால் பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்கள் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது.அதைபோல் காளையார்கோவில் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் அதிவேகமாக இறங்குவதால் சப்வேயின் வழியாக சர்வீஸ் ரோட்டில் வரும் வாகனங்கள் சாலையில் இணையும் போது அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. நேற்று முன்தினம் கூட இரவு 7:00 மணிக்கு மேம்பாலத்தில் இருந்து இறங்கிய டூவீலரும் சர்வீஸ் ரோட்டில் வந்த டூவீலரும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பள்ளி மாணவன் ஒருவர் காயமடைந்து சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.காலை மாலை நேரங்களில் பள்ளி செல்லும் வாகனங்கள் பணிக்கு செல்லக்கூடியவர்கள் டூவீலரிலும் நான்கு சக்கர வாகனத்திலும் ஒரே பகுதியில் இறங்கி ஏறுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் பாலத்தின் இரு புறங்களிலும் வாகனத்தில் செல்பவர்களை முறையாக செல்ல அறிவுறுத்த வேண்டும். காலை மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் இந்த பகுதியை கண்காணிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை