மானாமதுரையில் விநாயகர் சிலை விற்பனை
மானாமதுரை: மானாமதுரையில் நாளை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் விற்பனை நடைபெற்று வருகிறது. மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து விற்று வருகின்றனர். நாளை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மானா மதுரையில் கடந்த சில மாதங்களாகவே சிறிய அளவிலான விநாயகர் முதல் பெரிய விநாயகர் சிலை வரை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ரூ.10 லிருந்து ரூ.15,000 வரை சிலைகள் உயரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது. * சிங்கம்புணரியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. அரை அடி முதல் ஒரு அடி வரை பல்வேறு வண்ணங்களில் வீடுகளில் செய்யப்பட்ட சிலைகள் நகரில் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. ரூ. 50 முதல் 500 வரை சிலைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சிலைகளை பொதுமக்கள் ஆர் வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.