காங்., ஊர்வலம்
சிவகங்கை,; சிவகங்கை மாவட்ட காங்., கட்சியினர் ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து காமராஜர் சிலை வரை பா.ஜ., அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் சென்றனர். மாவட்ட தலைவர் சஞ்சய் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சுந்தர்ராஜன், காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் விஜயகுமார், வட்டார தலைவர்கள் மதியழகன், உடையார், கவுன்சிலர் மகேஷ்குமார், சண்முகராஜன், மோகன்ராஜ், சையது இப்ராஹீம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.