உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காட்சிப்பொருளான குப்பைக்கிடங்கு வீதியில் எரிக்கப்படும் குப்பை

காட்சிப்பொருளான குப்பைக்கிடங்கு வீதியில் எரிக்கப்படும் குப்பை

சிங்கம்புணரி : சிங்கம்புணரி, எஸ் புதுார் ஒன்றிய ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்குகள் காட்சிப் பொருளாக செயல்படாத நிலையில் வீதியில் குப்பை எரிக்கப்படுகிறது. சிங்கம்புணரி ஒன்றியத்தில் 30, எஸ்.புதுார் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் மற்றும் அதன் 250-க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்களில் சேரும் குப்பையை அந்தந்த ஊராட்சிகளில் பிரித்து கையாள குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல பெரும்பாலும் நீர்நிலைகள் கண்மாய்களுக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் குப்பை தண்ணீரில் கலந்து விடுகிறது. மேலும் ஊழியர்கள் பெரும்பாலும் கிராம வீடுகளில் சேரும் குப்பையை கிடங்குகளுக்கு கொண்டு செல்லாமல் ஆங்காங்கே ரோட்டோரங்களில் போட்டு எரிக்கின்றனர். சிலர் ஆறு, கால்வாய் போன்றவற்றில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் இரு ஒன்றிய கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை கேள்விக்குறியாகி வருகிறது. குப்பைக் கிடங்குகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிடுவதே இல்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள குப்பைக் கிடங்குகளை சீரமைத்து முறையாக திடக்கழிவு மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ