உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளத்தில் சிக்கிய காஸ் லாரி

பள்ளத்தில் சிக்கிய காஸ் லாரி

மானாமதுரை : மானாமதுரை வைகை ஆற்றுப்பகுதியில் இருந்து கடலாடிக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மானாமதுரை வழி விடும் முருகன் கோயில் அருகே பெட்ரோல் பங்க் முன் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று பெட்ரோல் பங்கிற்கு காஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி ஒன்று நான்குவழிச் சாலை ஓரத்தில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகும் பகுதியில் சிக்கிக் கொண்டது. போலீசார் தடுப்புகளை வைத்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி