உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழையில் இடிந்த வீடு காயத்துடன் தப்பிய சிறுமி

மழையில் இடிந்த வீடு காயத்துடன் தப்பிய சிறுமி

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி. டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. காரைக்குடியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் ராஜபாண்டியின் ஓட்டு வீடு நேற்று காலை இடிந்து விழுந்தது.ஒட்டு வீட்டில், தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. மற்றவர்கள் அருகில் இருந்த ஓலை குடிசையில் இருந்ததால் காயமின்றி தப்பினர். காயமடைந்த சிறுமிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தாசில்தார் ராஜா நிவாரண பொருட்கள் வழங்கியதுடன் உரிய நிவாரண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை