குளோபல் பள்ளி மாணவர்கள் சாதனை
சிங்கம்புணரி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் ஏ.எஸ்.அப்துல் முகைமின் 595 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் 1735 வது ரேங்க் பெற்று சாதனை புரிந்துள்ளார்.சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். இப்பள்ளியில் இருந்து மேலும் 8 மாணவர்கள் 480 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.இந்தாண்டு குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் இருந்து 10 மாணவர்கள் ஜே.இ.இ., நுழைவு தேர்வில் 90 சதவீதத்துக்கு மேல் பெற்றுள்ளனர்.நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற குளோபல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் பள்ளி தாளாளர் பேராசிரியர் காந்தி, இயக்குநர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.