சிவகங்கை அருகே வீட்டில் தங்க, வெள்ளி நகை திருட்டு
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிலந்தகுடியை சேர்ந்தவர் செல்வம் மனைவி ஆனந்தி 33. செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஆனந்தி ஆக.16ம் தேதி காலை 10:30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தந்தை ஊரான வீரப்பட்டி கிராமத்திற்கு சென்றார். நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க செயின், ஒரு பவுன் செயின் ஒன்றரை பவுன் நெக்லஸ், வெள்ளி கொலுசு 3 செட், வெள்ளி கை செயின் 2 உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தது. ஆனந்தி மதகுபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நகைகளை திருடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.