உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நன்றாக விளைந்தும் குறைந்த மகசூல்

நன்றாக விளைந்தும் குறைந்த மகசூல்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் மகசூல் பாதிக்கும் குறைவாக கிடைத்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார், எஸ்.எஸ்.கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்தனர். பரவலாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், இந்தாண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். காலம் தவறி பெய்த மழை, பனி உள்ளிட்ட காரணங்களால் பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டது. தற்போது தாலுகா முழுவதும் பல்வேறு இடங்களில் அறுவடை நடந்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவைவிட பாதிக்கும் குறைவாகவே மகசூல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.பித்தரைச்செல்வம், விவசாயி, மேலவண்ணாரிருப்பு: வழக்கமாக ஏக்கருக்கு 40 மூடை வரை மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டு நல்ல மழை பெய்திருந்த நிலையில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் சராசரியாக ஏக்கருக்கு 18 மூடை தான் நெல் கிடைத்துள்ளது. இதுவரை விவசாயக் கூலிக்காக செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் வாங்கிய கடனையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை