மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
5 hour(s) ago
பயிற்சி முகாம்
5 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
5 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
5 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
5 hour(s) ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவில் முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு வீணாகி பூட்டிக்கிடக்கிறது.சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு பயன்பாட்டுக்காக சமுதாயக்கூடம், கிட்டங்கிகள் கட்டப்படுகின்றன. இவை சில இடங்களில் முறையான திட்டமிடல் இல்லாமல் எதிர்கால நோக்கம் இன்றி பயன்பாட்டுக்கு உதவாத இடங்களில் கட்டப்படுகிறது. இதனால் எந்த பயன்பாடும் இல்லாமல் அவை பூட்டியே கிடக்கிறது. குறிப்பாக சிங்கம்புணரி ஒன்றியத்தில் கல்லம்பட்டி ஊராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஊருக்கு வெளியே கட்டப்பட்டதால் அதில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்த முடியாமல் பாழடைந்து சிமென்ட் கோடவுனாக மாறிவிட்டது. எஸ் புதூர் ஒன்றியம் பொன்னடபட்டியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடமும் ஊருக்கு வெளியே அமைந்ததால் அதிலும் நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் போனது. பிறகு அக்கட்டடம் நல்வாழ்வு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு, மீண்டும் செயல்பாடு இல்லாமல் கிடைக்கிறது. முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்போது அதிகாரிகள் சில மக்கள் பிரதிகளின் பேச்சைக் கேட்டு தவறான இடங்களை தேர்வு செய்து விடுகின்றனர். இதனால் அங்கு எழுப்பப்படும் கட்டடங்கள், திட்டங்கள் பயன்பாட்டுக்கு வராமல் மக்கள் வரிப்பணம் வீணாகி விடுகிறது. எனவே வருங்காலங்களில் முறையான திட்டமிடலுடன் அரசு திட்டங்களை செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago