மானாமதுரையில் நாளை பசுமை மாரத்தான் போட்டி
மானாமதுரை : மானாமதுரையில் பசுமையை வலியுறுத்தி ஹார்ட்புல்னெஸ் தியான அமைப்பு மற்றும் செர்டு தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பசுமை ஹார்ட்புல்னெஸ் மாரத்தான் ஓட்ட பந்தயம் காலை 7:00 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் துவங்க உள்ளது. கலெக்டர் பொற்கொடி துவக்கி வைக்கிறார். நாடு முழுவதும் நாளை 125 இடங்களில் நடைபெற உள்ள நிலையில் ஏராளமான மாணவர்கள்,இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ள உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.