உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மானாமதுரையில் பசுமை மாரத்தான் ஓட்டம்

 மானாமதுரையில் பசுமை மாரத்தான் ஓட்டம்

மானாமதுரை: மானாமதுரையில் நடைபெற்ற பசுமை மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் இன்று 125 இடங்களில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, ஹார்ட் புல்னெஸ் தியான அமைப்பு சார்பில் பசுமையை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை முன்னிட்டு மானாமதுரையில் ஹார்ட் புல்னெஸ் தியான அமைப்பு கிளை, செர்டு தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற பசுமை மாரத்தான் போட்டியை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி துவக்கி வைத்தார். இப்போட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து காந்தி சிலை, தேவர் சிலை, அண்ணாதுரை சிலை, மெயின் பஜார், மரக்கடை பஸ் ஸ்டாப், பழைய பஸ் ஸ்டாண்ட், கீழமேல்குடி ரோடு வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று முடிவடைந்தது. இதில் மானாமதுரை அருகே உருளியை சேர்ந்த அழகேஷ் முதலிடமும், மகேந்திரன் இரண்டாம் இடமும், மானாமதுரை சுரேந்தர் மூன்றாம் இடம் பெற்றனர். மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றுகளுடன் மரக்கன்றுகள் வழங்கினர். மண்டல ஒருங்கிணைப்பாளர் குமார், நிர்வாகிகள் குமார் ராதாகிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை