உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் தாலுகாவில் நிலக்கடலை சாகுபடி குறைந்தது

திருப்புவனம் தாலுகாவில் நிலக்கடலை சாகுபடி குறைந்தது

திருப்புவனம்,: திருப்புவனம் வட்டாரத்தில் பன்றிகள் தொல்லை, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் நிலக் கடலை சாகுபடி 90 சத விகிதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை நிலக்கடலை பயிரிடுவார்கள். நாட்டு நிலக்கடலை, கம்பெனி நிலக்கடலை, ஆந்திர நிலக்கடலை என மூன்று ரகங்கள் உள்ளன. இதில் நாட்டு நிலக்கடலை ருசியாகவும் எண்ணெய் சத்து மிக்கதாகவும் இருக்கும், எண்ணெய் தயாரிக்க இந்த நிலக்கடலையை வாங்குவார்கள்,. கம்பெனி, ஆந்திரா நிலக்கடலை பெரியதாகவும் ருசியாகவும் இருக்கும் தினசரி விற்பனைக்கு இந்த ரகங்களை பயிரிடுவார்கள், திருப்புவனம் வட்டாரத்தில் முக்குடி, பறையங்குளம், காஞ்சரங்குளம், செங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் வரை நிலக்கடலை பயிரிட்டு வந்தனர். நிலக்கடலை செடியில் சுருள் பூச்சி தாக்குதல் மற்றும் பன்றிகள் தொல்லை காரணமாக பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை பயிரிடுவதை நிறுத்திவிட்டனர். விவசாயிகள் கூறுகை யில், ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நிலக்கடலை பயிரிடுகின்றோம். ஏக்கருக்கு 40 முதல் 50 மூடை (ஒரு மூடை 38கிலோ) வரை கிடைத்தால் மட்டுமே லாபம் இருக்கும், ஆந்திர நிலக்கடலையில் ஒரளவிற்கு லாபம் இருக்கும், நாட்டு கடலை, கம்பெனி கடலையில் கிடைக்காது. எனவே கடந்த சில வருடங்களாக ஆந்திர நிலக் கடலை பயிரிட்டு வருகிறோம், இரவு முழுவதும் வயல்களில் காத்து கிடக்க முடிவதில்லை. விவ சாயிகள் ஒரு பக்கம் காவல் இருக்க பன்றிகள் மற்ற பக்கத்தில் செடிகளை வேருடன் பிடுங்கி போட்டு விடுகிறது. கடன் வாங்கி பயிரிட்டும் போதிய விளைச்சல் இன்றி தவிக்கிறோம், அரசு சார்பில் எந்த வித மான்யமும் வழங்குவதில்லை என்றனர். விதை நிலக்கடலை கிலோ 125 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நிலக் கடலைக்கு வேளாண் துறை சார்பில் கிலோவிற்கு 21 சதவிகிதம் அல்லது 40 ரூபாய் மான்யம் வழங்கப் படுகிறது. இது ஆண்டு தோறும் மாறுபடும், இதனால் விவசாயிகள் தனியார் உர கடைகளில் விதை கடலை வாங்கி பயிரிடுகின்றனர். 2023-24ல் ஆயிரத்து 650 கிலோ, 2024-25ல் ஆயிரத்து 800 கிலோவும் மான்ய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டது. இந்தாண்டு விதை நிலக்கடலை வழங்கப் படவே இல்லை. விதை கடலை கேட்டு வந்த விவசாயிகளுக்கும் இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கவே, வேறு வழியின்றி விவசாயிகளும் நிலக் கடலை பயிரிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை