உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காவலர் வீரவணக்க நாள்

காவலர் வீரவணக்க நாள்

சிவகங்கை: காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு சிவகங்கை ஆயுதப்படை மைதான காவலர் நினைவுத் துாணுக்கு எஸ்.பி., சிவபிரசாத் மரியாதை செய்தார். 1959ம் ஆண்டு லடாக் பகுதியில் சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் விதமாகவும், காவல்துறையில் பணியில் இருந்த போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவுத் துாணுக்கு எஸ்.பி., சிவபிரசாத் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். உடன் கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள்., இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி