உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 3 பேருக்கு குண்டாஸ்

3 பேருக்கு குண்டாஸ்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கில் ஒருவரும், கஞ்சா வழக்கில் இருவரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார். நியூ ரைஸ் ஆலயம் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி ரூ.133 கோடிக்கு மேல் மக்களிடம் வசூல் செய்து மோசடி செய்த வேலுார் மாவட்டம் ஆம்பூர் வடபுதுப்பட்டு பாபுவை 53, பொருளாதார குற்றவாளியாக தடுப்புக் காவலில் வைக்கவும். அதேபோல் சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா வழக்கில் தெடார்புடைய சங்கர், தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய தனுஷ்ராஜ் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி