உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் அறுவடைபணி துவக்கம்

காரைக்குடியில் அறுவடைபணி துவக்கம்

காரைக்குடி: காரைக்குடி அருகே திருவேலங்குடியில் விவசாயிகள் நெல் அறுவடை பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், நெல்மணிகள் பதரானதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.காரைக்குடி அருகேயுள்ள திருவேலங்குடி பகுதியில் 50 ஏக்கருக்கும் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள புது கண்மாய் மூலம் கடந்த அக். மாதம் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர்.உழவு, உரம், விதை நெல் கூலி என ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரத்துக்கு மேல் விவசாயிகள் செலவு செய்துள்ளனர். தற்போது, தை மாத தொடங்கியதையடுத்து விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் நெல்மணிகள் பலவும் பதராய்ப் போனதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றன. முத்து விஜயா கூறியதாவது, தற்போது விவசாய பணிக்கே ஆட்கள் கிடைக்காத நிலையில் கடந்த ஐப்பசியில் நெல் விதைப்பில் ஈடுபட்டோம். உழவு, உரம். விதைநெல் என ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்தோம். புதிய தண்ணீர் இல்லாததால் நெல்மணி பதராகி போனது. அறுவடைக்கும் ஒருவருக்கு ரூ.350 கூலி கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது வேறு வழியின்றி அறுவடைப்பணியில் ஈடுபட்டு வருகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ