உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் முகமது வகாப் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்தோஷம், மண்டல செயலாளர் பூமிராஜன் பேசினர்.காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை தற்பொழுது தொகுப்பூதியத்தில் எம்டிஎம் திட்டத்தில் பணி செய்து வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்பிட வேண்டும்.தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் நிலை 2 பணியிடங்களை 2715 ஆக நிர்ணயிக்க கோரி பொது சுகாதாரத் துறை இயக்குனர் அரசுக்கு அனுப்பிய கோப்புக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை