உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருப்புத்துாரில் சாரல் மழை

 திருப்புத்துாரில் சாரல் மழை

திருப்புத்துார்: திருப்புத்துாரில் நேற்று கொடைக்கானல் போல 'குளு குளு' வென குளிர்ச்சியுடன் சாரல் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. திருப்புத்துாரில் கடந்த 3 மாதங்களாக மழை இல்லை. மழை காலத்திலும் அவ்வப்போது கோடை வெயில் போல வெப்பம் பகலில் சுட்டெரித்தது. மேலும் அதிகாலை மட்டுமின்றி பகலிலும் பனி பெய்யத் துவங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேகமூட்டமாக திருப்புத்துாரில் வெப்பம் குறைந்துள்ளது. நேற்று காலையில் சாரலுடன் மேகமூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து பகலில் சீதோஷ்ண நிலை குளிர்ச்சியாகவே இருந்தது. மாலையில் மீண்டும் சாரல் தொடர்ச்சியாக இருந்ததால் வெப்பம் முழுமையாக தணிந்து நகர் 'குளு குளு' என குளிர்ச்சியை மக்கள் அனுபவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி