நாளை உயர் கல்வி குறைதீர் கூட்டம்
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களுக்கு உயர்கல்வி குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மாணவர்கள் பங்கேற்று, பிளஸ் 2 ல் தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க உள்ள மாணவர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைதேர்வு எழுதிய, எழுதாத மாணவர்கள், கல்விக்கடன் தேவைப்படுவோர் பங்கேற்று ஆலோசனை பெறலாம். உயர்கல்விக்கு விண்ணப்பிக்க தேவையான ஜாதி, வருமானம், இருப்பிட சான்றுகளை இ-சேவை மையம் மூலம் உடனே விண்ணப்பித்து பெறலாம். இது தவிர பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். மாணவர்கள் இக்குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.