உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விடுதி பணியாளர் சங்க கூட்டம்

விடுதி பணியாளர் சங்க கூட்டம்

சிவகங்கை : தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதி பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோபால் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் ராஜேஷ் குமார் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் இளையராஜா வரவு செலவு அறிக்கை வாசித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் பூமிநாதன், ராசு பேசினர். விடுதியில் பணிபுரியும் சமையலர்கள் காவலர்கள் பணிமூப்பு அடிப்படையில் பணி மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை