உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டு வசதி வாரியம் வட்டி சலுகை  

வீட்டு வசதி வாரியம் வட்டி சலுகை  

சிவகங்கை: வீட்டுவசதி வாரியத்தில் மனை, வீடு, குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்று தவணை செலுத்தாதவர்களுக்கு வட்டி சலுகை வழங்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்று, 2015 மார்ச் 31 ல் தவணை காலம் முடிந்தும், தவணை தொகை செலுத்தாதவர்களுக்கு வட்டி சலுகை அறிவித்துள்ளனர். மாத தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வட்டி முதலாக்கத்தில் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாச தொகை, ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி ஆகிய தள்ளுபடி மேற்கொள்ளப்படும். 2015 மார்ச் 31க்கு முன் தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்கள், நிலுவை தொகையை அறிந்து, ஒரே தவணையில் செலுத்தி, வட்டி சலுகை திட்டம் மூலம் பயன்பெற்று, கிரயபத்திரத்தை திரும்ப பெறலாம். எனவே தவணையை முறையாக செலுத்தாதவர்கள் 2025 மார்ச் 31க்குள் வட்டி தள்ளுபடி போக செலுத்த வேண்டிய நிலுவை தொகையை ஒரே தவணையாக செலுத்தி பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !