மனித உரிமைகள் உறுதி மொழி
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் நேற்று நகராட்சி பணியாளர்கள் மனித உரிமைகள் உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். பொறியாளர் முத்து தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் ராமசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் அழகர்சாமி உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.